எக்ஸ்ரே ரிப்போர்ட்டை கையில் வாங்கிய நபருக்கு ஷாக் கொடுத்த ஹாஸ்பிடல்.. - தென்காசியில் பரபரப்பு..
தென்காசி அரசு மருத்துவமனையில், எக்ஸ்ரே அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடையநல்லூரைச் சேர்ந்த காளி பாண்டி, விபத்தில் சிக்கி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது, எக்ஸ்ரே எடுத்த நிலையில், பிலிம் தீர்ந்து போனதாகக் கூறி, ரிப்போர்ட்டை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காளி பாண்டி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story