காலையில் கல்யாணம்.. மாலையில் மறுவீட்டுக்கு செல்லும் போது அதிர்ச்சி - கதறி துடித்த 20 பேர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காலையில் திருமணம் முடிந்து மாலையில் மறு வீட்டுக்கு புதுமண தம்பதி சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ராமலிங்காபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் மணமகள் உமா மகேஸ்வரி ,மணமகன் விக்னேஷ் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர், காயமடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story