தாயை தவறாக பேசிய நண்பனுக்கு எமனாக மாறிய அண்ணன் தம்பி - நடுங்க வைக்கும் தென்காசி கொலை | Tenkasi

x

தென்காசி நகரப் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர், 2 தினங்களுக்கு முன்பு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் மீது 6க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்த‌தால், கொலை செய்த‌து யார் என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருடன் சுற்றித் தெரிந்த‌து. இதையடுத்து, சென்னைக்கு சென்றுகொண்டிருந்த‌ சாகுல் ஹமீதையும், அவருடைய சித்தி மகன் முகமது இஸ்மாயிலையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சாகுலின் தாய் குறித்து சின்னத்தம்பி தவறாக பேசியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த சாகுல் அடித்து உதைத்தால் மயங்கமடைந்த‌தாகவும் தெரிய வந்த‌து. அதன்பின்னர், வீட்டுக்குச் சென்று, தனது தாயின் சேலையை கிழித்து வந்து, முகமது இஸ்மாயில் உதவியுடன் சின்னத்தம்பியின் கழுத்தை நெறித்து கொலை செய்து, முட்புதருக்குள் வீசியது தெரிய வந்த‌து.


Next Story

மேலும் செய்திகள்