ரேஸ் கார் செய்த 8-ஆம் வகுப்பு மாணவர்கள் - கெத்து காட்டிய தென்காசி பசங்க | Tenkasi | Race Car

x

தென்காசி அருகே எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஒன்றிணைந்து 3 சக்கரம் கொண்ட மினி ரேஸ் காரை தயாரித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் ஹர்ஷத், சக்தி, மீரான் மற்றும் திலக் ஆகியோர், ரேஸ் கார் மீது கொண்ட ஆர்வத்தால், 25 ஆயிரம் ரூபாய் செலவில் 3 சக்கரம் கொண்ட மினி ரேஸ் காரை வடிவமைத்துள்ளனர். எளிமையாக தோற்றமளிக்கும் இந்த கார், சுமார் 400 கிலோ எடையை தாங்குமெனவும், ஒரு லிட்டர் பெட்ரோலில் 4 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்