மீண்டும் ஆட்டம் காட்டும் குற்றாலம்.. பார்த்தாலே பயத்தை கிளப்பும் காட்சி
மீண்டும் ஆட்டம் காட்டும் குற்றாலம்.. பார்த்தாலே பயத்தை கிளப்பும் காட்சி
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றால அருவிகளில் இரவு முழுவதும் வெள்ளப்பெருக்கு நீடித்ததை தொடர்ந்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இரவு முழுவதும் தடை தொடர்ந்தது. குறிப்பாக குற்றாலம் மெயின் அருவியில் இரவு முழுவதும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், கயிறு கட்டி தடுப்புகள் அமைத்து இரவு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story