``X-ரே-வுக்கு பதில் ஜெராக்ஸ்''- வலியை விட கொடுமை - ஹாஸ்பிடலில் அநியாயம் - அதிர வைக்கும் பேட்டி

x

தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் கையில் எலும்பு முறிவு என வந்த நோயாளிக்கு, எக்ஸ்ரே ஃபிலிம்-க்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்து கொடுத்திருப்பது எலும்பு முறிவு வலியை விட மிக மோசமானது என, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகமெங்கும் பரவும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் நிரம்பி வழிவதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத் தடுக்கின்ற பணிகளில் அரசு ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறபோதே, அரசு மருத்துவமனைகளின் நிர்வாகச் சீர்கேடுகள் மிகுந்த கவலையளிப்பதாக, சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்