திடீர் வெள்ளபெருக்கு... கோயிலில் சிக்கிய 168 பக்தர்கள்.. மீட்கப்பட்ட திக் திக காட்சிகள்

x

கடையநல்லூர் அருகே கோயிலில் சாமி கும்பிட சென்று, வெள்ளப்பெருக்கால் வெளியேற முடியாமல் தவித்த பக்தர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி பெரியநாயகம் அய்யனார் கோயில் உள்ளது. இங்கு, சாமி தரிசனம் செய்ய பெரியாற்றை கடந்து ஏராளமான பக்தர்கள் சென்றனர். அதன் பின்னர் கருப்பாநதி அணையில் இருந்து இரண்டாயிரம் கன‌அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், பெரியாற்று படுகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால், பெரியநாயகம் அய்யனார் கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த பக்தர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், கோயிலில் இருந்த ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 168 பக்தர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் 38 பேர் மீட்கப்பட்ட நிலையில், 22 குழந்தைகள் உட்பட 130 பேர் கோயிலிலேயே தங்க வைக்கப்பட்டனர். பின்னர், அணையில் இருந்து நீர் திறப்பு 700கன அடியாக குறைக்கப்பட்டதும், கோயிலில் இருந்தவர்கள் பத்திரமாக தடுப்பணை வழியாக மீட்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்