காலில் சேறு பட்டதால் இன்ஜினியரிங் மாணவன் அகால மரணம்

x

பொறியியல் படிக்கும் மாணவன் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பொன் செய்யந்தான், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் பொன் செய்யந்தான் நண்பர்களுடன் செம்மஞ்சேரி பகுதிக்குச் சென்ற போது காலில் பட்ட சேற்றைக் கழுவுவதற்காக அருகில் உள்ள குளத்தில் இறங்கி இருக்கிறார். அப்போது கால் வழுக்கி குளத்தில் விழுந்த மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கிறார். இது பற்றி தகவல் கிடைத்த தீயணைப்புத் துறையினர் பொன் செய்யந்தனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒப்படைத்தனர். கிராமத்தில் இருந்து வந்து கஷ்டப்பட்டுப் படித்து பொறியியல் படிப்பைப் படித்த மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்