தாயை கொடூரமாய் கொன்ற மகன் - அதிர்ச்சி சம்பவம் | Tenkasi

x

கடையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன், தனது தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள அருணாச்சலம் பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி, கற்பம் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் 17 வயதுடைய மூத்த மகனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கற்பகத்தின் தலையில், மனநலம் பாதிக்கப்பட்ட மகன் அம்மிக்கல்லை தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கற்பகத்தின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தப்பிச் சென்ற நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்