கோயிலில் பெண் தலைமை காவலர் செய்த பகீர் காரியம் - தென்காசியை அதிரவிட்ட சம்பவம்

x

தென்காசியில், பெண் தலைமை காவலர் ஒருவர் உண்டியல் பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் சங்கரநாரயணர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பெண்கள் ஈடுபட்டனர். அப்போது நான்கு பெண்கள் மட்டும் காணிக்கை பணத்தை எடுத்து சேலைக்குள் மறைத்து வைத்தனர். இதை சக பெண்கள் கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்கவே, நான்கு பேரிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் உண்டியல் பணத்தை திருடி, மறைத்து வைத்திருந்ததும் உறுதியானது. உண்டியல் பணத்தை திருடிய அனிதா, மாரியம்மாள், முத்துலட்சுமி, மகேஷ்வரி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்டவர்களில் ஒருவரான மகேஷ்வரி, தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்