ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்..ஆத்திரத்தில் மகனை அறைந்த தந்தை - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
சங்கரன்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்த தகர செட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தவரை, அவரது தந்தை அறைந்தால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், பாட்டத்தூர் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர செட் அமைத்துள்ளதாக, லட்சுமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார்.
அதனை விசாரணை செய்த நீதிமன்றம், உடனடியாக அந்த தகர செட்டை அகற்ற வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்புடன், மழையையும் பொருட்படுத்தாமல் தகர செட்டை அகற்ற சென்ற அதிகாரிகளுக்கும், ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களை சமரசம் செய்தனர். தகர செட்டை அகற்ற சென்ற போது ஆக்கிரமிப்பாளரின் மகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை கண்டு ஆத்திரமடைந்த அவரது தந்தை, எதிர்ப்பு தெரிவித்த மகனை கன்னத்தில் அறைந்தது, அதிகாரிகள், மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் நடைபாதை ஆக்கிரமிப்பை காவல்துறையினர் உதவியோடு, நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.