பேச்சுலர் பார்ட்டியில் நடந்த விபரீதம் .. தென்காசியை குலைநடுங்க விட்ட சம்பவம்

x

குற்றாலம் அருகே, திருமண விழாவையொட்டி வைக்கப்பட்ட மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்றிரவு நண்பர்களுக்கு மது விருந்து அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, முனியா கணேசன் என்பவருக்கும், பட்டமுத்து என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முனியா கணேசன், அரிவாளால் பட்டமுத்துவை வெட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தாக்குதலை தடுக்க வந்த பட்டமுத்துவின் நண்பர் அருண்குமார் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவாக உள்ள முனியா கணேசன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்