Temple Festival | மாசி குண்டம் திருவிழா கோலாகலம்
ஈரோடு, கள்ளுக்கடை மேடு பத்திரகாளியம்மன் கோவில் மாசி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது . பொதுமக்கள் வழங்கிய விரகு காணிக்கைகளை கொண்டு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதனையடுத்து பத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Next Story