1008 லிட்டர் பால் அபிஷேகம் - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.. பக்திமயமான தமிழகம் | Temple | Thanthi TV

x

விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் புனித நீராடி 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பின்னர் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இன்று மார்கழி மாதம் முதல் ஞாயிற்று கிழமையை ஒட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் சாமிக்கு ஆயிரத்தெட்டு லிட்டர் பாலில் அபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

முருகனின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெயிலில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்