கோவில் தேரோட்டம்.. சீர் எடுத்து வந்த காவல்துறையினர் - வியந்து நின்ற மக்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டத்திற்காக காவல்துறையினர் சீர்வரிசை கொண்டு வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்ரகாளியம்மன் கோவிலில், பங்குனி மாத திருவிழாவின் ஒரு பகுதியாக தேரோட்டம் நடைபெற்றது. இதற்கான சிறப்பு நிகழ்வாக, அந்தியூர் காவல் நிலையத்தில் இருந்து காவல்துறையினர் புடவை, பழங்கள், பூக்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
Next Story
