டீ, காபி குடிக்காதீங்க.. "காத்திருக்கும் பேராபத்து.. உத்திரவாதமே இல்ல" - பறந்த எச்சரிக்கை

x

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஊட்டச்சத்து

நிறுவனத்துடன் இணைந்து, ஆரோக்கியமான உணவு

பழக்கங்கள் தொடர்பான 17 பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. பல தரப்பட்ட உணவுகள் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. பால் கலந்த டீ காபி உள்ளிட்ட பல்வேறு வகையான கேஃபீன் (caffeine) அதிகம் கொண்ட பானங்களை உணவு உண்ணும் போது அருந்தக் கூடாது என்று கூறியுள்ளது. உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ அருந்தக் கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது. டீ, காபி போன்ற பானங்களை அதிக அளவில் பருககக் கூடாது என்றும், அவற்றில் உள்ள கேஃபீன் (caffeine) நரம்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தி, அதற்கு அடிமையாக்கி விடும் என்று எச்சரிக்கிறது. இவற்றில் உள்ள டானின், இரும்பு சத்து குறைபாட்டை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. காபி, டீ அதிகம் உட்கொள்வதால் ரத்தம் அழுத்தம் அதிகரித்து, சீரற்றா இதய துடிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது


Next Story

மேலும் செய்திகள்