டீ உடன் அதை சேர்த்து சாப்பிட்ட குழந்தை புரை ஏறி மரணம்..கூறு போட்ட உடலை கைகளில் வாங்கி கதறிய பெற்றோர்
டீ உடன் அதை சேர்த்து சாப்பிட்ட குழந்தை புரை ஏறி மரணம்.. பைக்கிலே பிரிந்த உயிர்.. கூறு போட்ட உடலை கைகளில் வாங்கி கதறிய பெற்றோர்
டீயில் பிஸ்கட்டை தோய்த்து சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை, திடீரென மூச்சு திணறி உயிரிழந்திருக்கிறது. மனதை ரணமாக்கும் இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம் விரிவாக..
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த தம்பதி அரி கிருஷ்ணன் மற்றும் அமுலு.
குறவர் இனத்தை சேர்ந்த இவர்களின், 3 வயது பெண் குழந்தைதான் வெங்கட லட்சுமி தேகலா..
ஏற்கனவே இரண்டு நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற இந்தக் குழந்தைக்கு, வீட்டில் டீயில் பிஸ்கட்டை தோய்த்து சாப்பிட்ட போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.
குழந்தைக்கு உடனடி சிகிச்சை அளித்தாக வேண்டும்.. ஆனால், அருகில் மருத்துவமனையோ, ஆரம்ப சுகாதார நிலையமோ இல்லாத நிலையில், சுமார் 10 கிலோமீட்டர் தூரம் உள்ள கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, இருசக்கர வாகனத்திலேயே குழந்தையை தூக்கிக் கொண்டு பதறியடித்த படி சென்றிருக்கின்றனர்...
பின் மேல் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில், 25 கிலோமீட்டர் தூரத்தில், செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி கூட செய்து தராததால், மீண்டும் இரு சக்கர வாகனத்திலேயே பயணித்துள்ளனர்....
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே உயிர் பிரிந்துவிட்டதாக பெற்றோரின் தலையில் இடியை இறக்கி இருக்கிறார்.
பின்னர் தகவலறிந்து வந்த போலீசார், குழந்தைக்கு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என கூறியதை அடுத்து, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்களோ, இங்கு அதற்கான சாதனங்கள் இல்லையென கூறி திருவள்ளூர் அரசு மருத்துவமனையை கை காட்டியுள்ளனர்.
அங்கு, உடற்கூறாய்வு நடத்தப்பட்டு, பெற்றோரின் கைகளில் குழந்தையின் உடல் தரப்பட்டது.
உயிரிழந்த குழந்தைக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யபட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் மூச்சு திணறலே உயிரிழப்பிற்கு காரணம் என கூறியுள்ளனர்.
முதலுதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம், நீண்ட தூர இருசக்கர வாகன பயணம் என குழந்தையின் இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று, தங்கள் தரப்பு வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர் குழந்தையின் பெற்றோர்.
இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...