டாட்டா நிறுவனத்தை இழுத்தடித்த ஊராட்சி மன்ற தலைவர்.. ஆட்சியர் கொடுத்த எதிர்பாரா தண்டனை

x

ராணிப்பேட்டையில் டாட்டா மோட்டார்ஸ் ஆலை அமைக்க கட்டிட வரைபட அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்திய நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவரின் நிதி அதிகாரத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நெடும்புலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஆயிரத்து 213 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் நேரில் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவர் மாறன் கட்டட வரைபட அனுமதிக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக அந்நிறுவனம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்