"பாட்டிலுக்கு ரூ.10 கூட வாங்கியே ஆகணும்.." மிரட்டிய டாஸ்மாக் மேனேஜர்..- வைரலாகும் வீடியோ

x

டாஸ்மாக்கில் குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக நிச்சயம் வசூலித்தே தீர வேண்டும் என விற்பனையாளர்களை மேற்பார்வையாளர் நிர்பந்திக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


சென்னை சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் குணசேகரன் என்பவர், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்க வேண்டும் என நிர்பந்தித்துள்ளார். அப்போது கடை ஊழியர்களுக்கும் மேற்பார்வையாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது என்ன செய்ய வேண்டும் என தனக்கு தெரியும் என்றும், கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே என்றும் மேற்பார்வையாளர் கூற, 10 ரூபாய் கூடுதலாக விற்க வேண்டும் என எழுதிக் கொடுங்கள் என டாஸ்மாக் ஊழியர் கேட்டார்.


Next Story

மேலும் செய்திகள்