"தமிழ்நாடு முழுவதும்" - டாஸ்மாக் தொடர்பான வழக்கில் சென்னை ஐக்கோர்ட் அதிரடி உத்தரவு

x

தமிழ்நாடு முழுவதும் வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் எத்தனை கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் காலி செய்யாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது? என்பது குறித்து நேரில் அறிக்கை சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பி.சுந்தர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு சொந்தமான 220 சதுர அடி கடையில், டாஸ்மாக் மதுக்கடைக்கு ஒப்பந்தம் செய்ததாகவும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டதால், இந்த கடைக்கு பின்னால் 400 சதுர அடியில் மற்றொரு கடையை கட்டிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால், பழைய கடையில் இருந்து புதிய கடைக்கு மதுக்கடையை மாற்றாததாலும், ஒப்பந்த காலம் முடிவந்து விட்டதாலும், கடையை காலி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடையை காலி செய்ய வற்புறுத்தியதால், திருட்டுத்தனமாக மது விற்றதாக தன் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , தமிழ்நாடு முழுவதும் வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் எத்தனை கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் காலி செய்யாமல் தொடர்ந்து மதுக்கடைகளை நடத்தி வருகிறது? என்பது குறித்த அறிக்கையுடன் நவம்பர் 18ம் தேதி நேரில் ஆஜராகும்படி, டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்