தஞ்சையை நடுநடுங்க விட்ட ஆசிரியை படுகொ*ல..மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் | Tanjore

x

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கவுன்சிலிங்கில் 522 மாணவ மாணவிகளும், 22 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மனநல மருத்துவர் மங்கையர்கரசி, மாவட்ட மனநல மருத்துவர் சித்ரா தேவி,, மனநல ஆற்றுநர் சுபாஷ், சமூக ஆர்வலர் சுகந்தி உள்ளிட்டோர் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மன இறுக்கத்தை போக்க பயிற்சி அளித்தனர். முன்னதாக இறந்த ஆசிரியை ரமணிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். நாளை முதல் மல்லிப்பட்டினம் அரசு பள்ளி திறக்கப்பட உள்ளது. கடந்த 20ஆம் தேதி ஆசிரியை ரமணி வகுப்பறையில் கொல்லப்பட்ட நிலையில், அந்த பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்