"நாயகன் மீண்டும் வரான்.." ஷாக் கொடுத்த வானிலை மையம் | Thanthitv
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அடுத்த 5 நாட்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story