குழந்தை பாக்கியம் கேட்டு தவிக்கும் தம்பதிகளுக்கு வரமாக வந்த சேதி.. கனவை நினைவாக்கும் தமிழக அரசு

x

தெருவுக்கு 4 மளிகைக் கடைகள் இருப்பது போல, வீதிக்கு வீதி செயற்கை கருத்தரித்தல் மையங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது..

சீரற்ற வாழ்க்கை முறை, பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் துரித உணவுகளுக்கு பழகிப்போன பலருக்கும், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் போன்ற பழக்கங்கள் உள்ள பலருக்கும், குழந்தை பெறுவதில் சிக்கல் அதிகரித்து வருகிறது..

இதனால் செயற்கை கருத்தரித்தல் மையங்களை மக்கள் அதிகளவில் நாடுகின்றனர். அதே நேரத்தில் அத்தகைய சிகிச்சைகளுக்கு பொருளாதார ரீதியில் வசதி படைத்த மக்கள் மட்டுமே செல்லும் வகையில் சிகிச்சைக்கான கட்டணமும் கண்டபடி உள்ளது.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் முதற்கட்டமாக இரண்டு கருத்தரிப்பு மையங்கள் தொடங்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி, 6. 97 கோடி மதிப்பீட்டில் அதி நவீன செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் பிரசவ வளாகமானது எழும்பூர் தாய், சேய், நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டது...

ஏற்கனவே இதே மருத்துவமனையில் Intra Uterine Insemination எனப்படும் பெண்ணின் கருப்பைக்குள் விந்தணுவை செலுத்தும் சிகிச்சை செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது in-vitro fertilization எனப்படும் ஐ.வி.எப் சிகிச்சை முறையும் துவக்கபட்டதன் மூலம் அனைத்து விதமான கருத்தரிப்பு சிகிச்சையும் இனி அரசு மருத்துவமனையிலேயே மேற்கோள்ள முடியும்

மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒவ்வொரு பெண்ணிற்கு இரண்டரை லட்சம் வரை செலவாகும் பணத்தை அரசு முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கிறார் மருத்துவமனை இயக்குநர் கலைவாணி...


Next Story

மேலும் செய்திகள்