10 ரூபாயில் ஒளிந்திருக்கும் எமன்.. கூல் டிரிங்ஸ் குடிப்பீங்களா?.. உஷார்.. சிறுமி இறந்த சுவடு ஆறும் முன் அடுத்து.. ரெய்டில் ஷாக்கான அதிகாரிகள்

x

அடிக்கும் வெயிலுக்கு குளுமைக்காக நாம் வாங்கும் கூல் டிரிங்ஸ் பாட்டில்கள் உயிருக்கே உலை வைக்கும் அபாயம்...

திருவண்ணாமலையில் 10 ரூபாய் கூல் டிரிங்ஸ் வாங்கிக் குடித்த சிறிது நேரத்திலேயே 6 வயது சிறுமி வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளே இன்னும் ஓயவில்லை...

அதற்குள் மற்றுமொரு சம்பவம் திருப்பத்தூரில்...மரண வாசல் வரை அழைத்துச் சென்று பயம் காட்டியுள்ளது 10 ரூபாய் கூல் டிரிங்ஸ்...

திருப்பத்துார் மாவட்டம்...ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்துார் கிராமம்...

இங்கு உள்ள ஒரு குட்டி பெட்டிக்கடையில் அதே பகுதியைச் சேர்ந்த மன்சூரும்...அவரது உறவினரான ஆசிரியர் நகரைச் சேர்ந்த ரியாசும்..10 ரூபாய் கொடுத்து ஒரு குளிர்பான பாட்டிலை வாங்கியுள்ளனர்...

ஆளுக்குப் பாதி பாதி குடித்து விட்டு...பாட்டிலின் அடியில் பார்த்தால்...பல்லி ஒன்று செத்து மிதந்து கொண்டிருந்திருக்கிறது...

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மன்சூருக்கும், ரியாசுக்கும் குமட்டல்...வயிற்று வலி...என பல்லி விழுந்த கூல் டிரிங்க்ஸ் வேலையைக் காட்டியுள்ளது...

உடனடியாக இருவரும் திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி சம்பந்தப்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள கூல் ட்ரிங்க்ஸ் கம்பெனிக்கு நேரில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்...

அங்கு சுகாதாரமற்ற முறையில் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதைக் கண்டு அதிர்ந்து போன அதிகாரிகள் கம்பெனியை இழுத்துமூடி சீல் வைத்தனர்...

இச்சம்பவம் குறித்து கூல் டிரிங்க்ஸ் கம்பெனியின் உரிமையாளர் ராஜா மீதும், பல்லி விழுந்த கூல்டிரிங்சை விற்ற ரம்யா மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...

மலிவு விலையில் கிடைக்கும் இதுபோன்ற குளிர்பானங்கள் விஷமாய் மாறி வரும் சம்பவங்கள் தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளன...


Next Story

மேலும் செய்திகள்