தமிழ்நாட்டில் 32 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் - தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
ரயில் நிலையங்களை நவீனப்படுத்தவும், பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் 550 ரயில் நிலையங்களை அம்ரித் ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தவும், 1,500 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கவும் பிரதமர் மோடி இன்று திங்கள்கிழமை அடிக்கல் நாட்டுகிறார். அவற்றில், தமிழ்நாட்டில் 32 ரயில் நிலையங்கள் ரூபாய் 803.78 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட உள்ளன.
சென்னையில் கடற்கரை, கிண்டி, அம்பத்தூர், மாம்பலம் மற்றும் நாமக்கல், கோயம்புத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் அம்ரித் ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இந்நிலையில், சோழவந்தான் ரயில் மேம்பாலத்தை பிரதமர் மோடி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதைத் தொடர்ந்து, திருமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.