அடையாளம் தெரியாத அளவிற்கு சேதமான அரகண்டநல்லூர் கிராமம்
திரும்பிய பக்கமெல்லாம் சிதைந்த வீடுகள்.... கற்களும், குப்பைகளுமாய் காணப்படும் தெருக்கள்...என அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து கிடக்கிறது அரகண்டநல்லூர் கிராமம்....
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால், தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளித்த சூழலில், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரகண்டநல்லூர் கிராமமும் இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை...
ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்....கிராமத்தையே ஸ்தம்பிக்க வைத்த நிலையில், வெள்ளத்தில் இருந்து மீள முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர் கிராமத்தினர்..
Next Story