வெறும் 5 நாள் இன்ஸ்டா பழக்கம்... இளைஞரோடு பர்கூர் மலைக்கு சென்று பிணமாக திரும்பிய சிறுமி

x

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய 15 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராமில் சுனில் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. கடந்த 5 நாட்களாக இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி வந்ததாக கூறப்படும் நிலையில், தனது தாய் வேலை பார்க்கும் கடையை கவனித்து கொள்வதாக கூறி சிறுமி வீட்டை விட்டு சென்றுள்ளார். கடைக்கு செல்லாமல் சுனில் உடன் பர்கூர் மலைப்பகுதிக்கு சென்றதாகவும், அங்கிருந்து திரும்பும்போது, ஊசிமலை பகுதியில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதாகவும் தகவல் வெளியானது. இதில் கழுத்து பகுதியில் படுகாயமடைந்த சிறுமி, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனினும், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறும் குடும்பத்தார், போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்