"கடன் வாங்கி பண்ணோம்..எல்லாம் தண்ணீல மூழ்கி போச்சு"விவசாயிகள் கண்ணீர்..| Rain | Tamilnadu
தொடர் கனமழை காரணமாக திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம், உதய மார்த்தாண்டபுரம், மாங்குடி, பள்ளியமேடு, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நெல் வயல்கள் கடல் போல் காட்சி அளிக்கின்றன. அப்பகுதியில் செல்லும் கழனி ஆற்றில் மேற்கொள்ளபட்ட தூர்வாரும் பணி பாதியில் நிற்பதால் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story