ஜூன் 1,2 தமிழகத்தில்... - வானிலை மையம் சொன்ன தகவல்

x

தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது... ஜூன் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜூன் 1, 2ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், திருச்சி மற்றும் நாமக்கல்லில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக பட்ச வெப்ப நிலை 105 டிகிரி வரை செல்ல வாய்ப்புள்ளது... குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென் தமிழக கடலோரம், தென்மேற்கு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரள கடலோரம் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்