3 மாடுகள் உயிரிழப்பு - உரிமையாளர்கள் கதறி அழுகை

x

கும்மிடிப்பூண்டி அருகே பூச்சிக்கொல்லி மருந்து கலந்த நீரை குடித்த 3 பசு மாடுகள் உயிரிழந்த நிலையில், அதன் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் - மீனாட்சி தம்பதியினர், மாடு வளர்ப்பில் ஈடுபட்டு தங்களது பொருளாதார தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளனர். இந்நிலையில், தனியார் தோட்டத்தில் புற்களை அழிக்க வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்ட நீரை குடித்து 3 மாடுகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்