முன்விரோத பகை..முற்றிய வெறி..வெட்டிய வெட்டில் முகமே இல்லை..நினைத்து கூட பார்க்க முடியாத கோர சம்பவம்
சேலம் மாவட்டம், சங்ககிரி வாணியர் காலனியைச் சேர்ந்த யமஹா மூர்த்திக்கும், வேலம்மாவலசு பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 13ம் தேதி மூர்த்தி தனது நண்பரான சங்ககிரி ஆர்.எஸ்.பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரிடம் சென்று கனகராஜ் அசோக்கின் குடும்பத்தை தவறாக ஊருக்குள் பேசி வருவதாக கூறியுள்ளார். அசோக் குமார் கனகராஜை சின்னாக்கவுண்டனூர் ஐயப்பன் கோவில் அருகே வரசொல்லிய நிலையில் தன் நண்பர் சரவணனுடன் அப்பகுதிக்குச் சென்றுள்ளார் கனகராஜ். அங்கு அவரை அசோக்கும் மூர்த்தியும் கனகராஜை வெட்ட முயன்ற நிலையில், தடுக்கச் சென்ற சரவனணின் கைவிரல் துண்டானது. இருவரும் சத்தம் போடவே மூர்த்தியும் அசோக்கும் அங்கிருந்து தப்பியுள்ளனர்...
சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அசோக்குமாரை கைது செய்தனர. தலைமறைவான மூர்த்தி தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சங்ககிரி பச்சகாடு சின்னாக்கவுண்டனூர் சாலையில் மூர்த்தியை ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியுள்ளனர் மர்ம நபர்கள்.. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.