ஊரப்பாக்கம்வாசிகளே உஷார்... ஊருக்குள் புகுந்த `அனுமன்கள்'... பரபரப்பில் வண்டலூர்

x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய 2 அனுமன் குரங்குகள் ஊரப்பாக்கம் பகுதியில் சுற்றி வரும் நிலையில், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது மீண்டும் தப்பின...

கான்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட 10 அனுமன் குரங்குகள் மருத்துவ பரிசோதனைக்காக தனிப்படுத்தப்பட்ட கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூண்டில் இருந்து 2 அனுமன் குரங்குகள் தப்பித்து பூங்காவிற்குள் ஓடின. மேலும் அங்கிருந்து வெளியேறி ஊரப்பாக்கத்திற்குள் புகுந்துள்ளன... மிகப்பெரிய மர உச்சியில் இருந்த அனுமன் குரங்குகளை பூங்கா ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது, போக்கு காட்டிய குரங்குகள் மின்னல் வேகத்தில் மரத்திற்கு மரம் தாவி தப்பிச் சென்றன... மேலும் செல்போன் டவர், குடியிருப்பு என பல இடங்களில் அனுமன் குரங்குகள் சுற்றித் திரிவதாகக் கூறப்படும் நிலையில் விரைந்து அவற்றைப் பிடிக்க ஊழியர்கள் வேகம் காட்டி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்