முன்னரே கணித்த போலீஸ் மூளை..இருந்தும் போலீசிடமே கைவைத்து கம்பி நீட்டிய கயவர்கள்..அதிர்ச்சி CCTV

x

தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையத்தைச் சார்ந்த காவலர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடிய வேலையில் 8 க்கு மேற்பட்ட தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள்*

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் போலீசிடமே செயின் பறிப்பு

சிசிடிவி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், என எட்டு இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் கடல் கன்னி ஷோ என்ற நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஈஸ்வரி (வயது-56) என்பவர் குடும்பத்துடன் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்தபோது ஈஸ்வரி கழுத்தில் அணிந்த 8 சவரன் தங்க தாலி சங்கிலியை மர்ம நபர் பறிக்க முயற்சி செய்தனர்

சுதாரித்துக்கொண்ட ஈஸ்வரி தாலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் இருப்பினும் ஐந்து சவரன் தாலி சங்கிலி மட்டும் அறுத்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்..

தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி மறைமலைநகர்,என அடுத்தடுத்து எட்டு இடங்களில் கொள்ளையன் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்கி டாக்கி மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் வந்தது..

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் இந்திரா தனது பணியை முடித்துவிட்டு தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள தேவராஜா தெரு பகுதியில் உள்ள அவரின் வீட்டிற்கு செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த ஒரு நபரும் நடந்து பின் தொடர்ந்த் மற்றொரு மர்ம நபரும் இந்திரா வீட்டின் கேட்டை திறக்க முற்பட்டபேது கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலிச் சங்கிலியை அறுத்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர் அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது..

உடனடியாக காவல் கட்டுப்பாட்டறை 100 இருக்கு தகவல் சொன்னதன் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர் அனைத்து செக் போஸ்டர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது இதனால் வாகனத்தை தணிக்கையிலும் பணியில் இருந்த ஒரு சில காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இதை அறிந்த கொள்ளையர்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் காந்தி சாலை சந்திப்பில் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமான பல்சர் 220 போட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து தப்பி சென்றனர். இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

தாம்பரம் காவல் கமிஷனர் அலுவலகம் அருகே பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதில் அனைத்து காவல் நிலையத்தில் இருந்த காவல் துறையினர் அதில் கலந்து கொண்டனர்,

இதனால் முக்கியமான சாலை சந்திப்புகளில் பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது இதை அறிந்து கொண்ட கொள்ளையன் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது..

கொள்ளையனை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது தற்சமயம் அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்