பாரிஸில் நடக்க போகும் ஒலிம்பிக் "முதல் முறையாக இந்திய வீரர்கள்.." குவியும் பாராட்டுகள் | Thanthitv
வருகிற ஜூலை மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கு முதல் முறையாக இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் 16 இடங்களை வகிக்கும் அணிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில், 15வது இடத்தில் உள்ள இந்திய ஆடவர் அணியும், 13வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணியும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளன. ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீரர்கள் சரத் கமல், சத்யன் உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
Next Story