Sylendra Babu "அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கணும்" - சைலேந்திர பாபு
சைபர் குற்றங்கள் குறைய வேண்டும் என்றால், மக்கள் அது தொடர்பாக அதிக விழிப்புணர்வு பெற வேண்டும் என்று முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். சென்னை பெசன்ட் நகரில், காவல் துறை சார்பில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, சைபர் குற்றங்கள் குறைய வேண்டுமெனில் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என்றும், மக்கள் அதிக விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Next Story