சுவாமி மலையில் வள்ளி திருக்கல்யாண வைபவம் கோலாகலம்
முருகனின் நான்காம் படைவீடான கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் வள்ளி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திருமண விழாவில் மாலை மாற்றும் வைபவமும், அதனை தொடர்ந்து ஊஞ்சலில் நலங்கு வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, அக்னி யாகம் வளர்த்து வள்ளிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு வள்ளி திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story