"மாநில அரசுகளிடம் இலவச திட்டங்களுக்கு மட்டும் நிதி உள்ளதா?" - உச்சநீதிமன்றம் காட்டம்
இலவச திட்டங்களுக்கு நிதியைக் கொண்டுள்ள மாநில அரசுகள், ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு அளிக்க நிதியை கொண்டிருக்கவில்லை என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. அகில இந்திய நீதிபதிகள் சங்கத்தின் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2-ஆவது தேசிய நீதிசார் ஊதியக்குழுவின் பரிந்துரைகள்படி, இதரப்படிகளுடன் ஊதியம் உயர்த்தி அமல்படுத்துவதில், மாநிலங்களுக்கு உள்ள நிதி சிக்கலை கருத்தில் கொள்ள வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், எந்த வேலையும் செய்யாதவர்களுக்கும், தேர்தல் வந்தால், மகளிருக்கு மாதந்தோறும் நிதி வழங்குவதாக நீதிபதிகள் விமர்சித்தனர். டெல்லியில் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் இரண்டாயிரத்து 500 ரூபாய் வரை வழங்குவோம் என வாக்குறுதி அளித்துள்ளதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Next Story