``அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்?'' திடீர் ட்விஸ்ட் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் பரபரப்பு கேள்வி

x

ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றது ஏன் என்று, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அவரது ஜாமீன் மனுவை எதிர்த்து வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு, நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது "மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது என நீதிபதி ஓகா கூறினார்.

பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும்? என்றும்

நாங்கள் ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே நீங்கள்

அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது..? என்ன தான் நடக்கிறது என கேள்வி எழுப்பினார்.

அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளுக்கு இதனால் அழுத்தம் உருவாகாதா.? " என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கான விளக்கத்தை பிரமாண பத்திரமாக அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி,

விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்