"நடவடிக்கை கிடையாது..." காங்கிரஸுக்கு பெரும் நிம்மதி.. "நின்ன மூச்சு வந்தாச்சு..."

x

மக்களவை தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து 3 ஆயிரத்து 500 கோடி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை உறுதி அளித்துள்ளது.

வருமான வரி தாக்குதலில் தவறு செய்ததாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அபராதம், வட்டி என சுமார் 3500 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது .இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடியது. காங்கிரஸ் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி நாகரத்தினா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மக்களவை தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சியிடம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வசூலிக்க வருமான வரித்துறை எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்காது என உறுதி அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் விசாரணையை ஜூலை 2-ஆவது வாரத்திற்கு தள்ளிவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்