அதிர வைத்த ஹேமா கமிட்டி அறிக்கை... சுப்ரீம் கோர்டில் நடந்த விஷயம்

x

ஹேமா கமிஷன் அறிக்கை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி திரைப்படத் தயாரிப்பாளர் சஜிமோன் பாறயில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மேல்முறையீடு மனுவுக்கு கேரள அரசின் சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ஹேமா கமிஷன் அறிக்கை விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு இதுவரை 26 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 26 வழக்குகளில் இதுவரை 8 வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, மீதமுள்ள 18 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கண்டறியப்படும் தொடர்பதால் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு அமைத்து கேரள உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவில் எவ்வித தவறும் இல்லை என்பதால் சிபிஐ விசாரணை கோரும் இந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்