குடும்ப பிரச்சினையில் மூதாட்டி தற்கொலை? - விசாரணை

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த 65 வயதான சாந்திக்கும், அவரது மருமகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியேறி வாடகை வீட்டில் வசித்து வந்த சாந்தி, கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், தனது வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்று மகன் ராஜேந்திரன் வீட்டில் வைத்துவிட்டு, மண்ணெண்ணெய் கேனுடன் கோனேரிப்பட்டி ஏரிக்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்ணெண்ணய் கேனுடன் மூதாட்டி நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்