"திடீரென காற்றில் வந்த கருப்பு புகை..!" கண்ணிமைக்கும் நொடியில் கொழுந்து விட்டு எரிந்த KTM பைக்

x

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, கேடிஎம் பைக் ஒன்று, சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பானது. குலசேகரம் அருகே அண்டூர் புல்லை சேர்ந்த விவேக் என்பவர், தனது கேடிஎம் பைக்கில், கல்லடி மாமூடிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென என்ஜினில் இருந்து புகை வருவதை உணர்ந்த அவர், பைக்கை நிறுத்தி பார்க்கையில் பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பைக் தீயில் எரிந்து சாம்பலான நிலையில், இதன் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன


Next Story

மேலும் செய்திகள்