"ஹாஸ்டல்ல பெரிய கேங் வாரே நடந்துட்டு இருக்கு.."ஊரையே உலுக்கிய மாணவன் மரணம்..கலங்கி பேசிய தந்தை..
நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் தனியார் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், விடுதியில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார். அந்த பள்ளியின் விடுதியில் தங்கி, பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த, கரூர் வடிவேல் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அஜய், கடந்த 6-ஆம் தேதி விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து பலத்த காயமடைந்தார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள நாமக்கல் போலீசார், அஜய்யுடன் விடுதி அறையில் தங்கியிருந்த மாணவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகம், சரியாக விடுதியை நடத்தாததால், மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, தனது மகன் உயிரிழந்ததாக மாணவரின் தந்தை கூறியுள்ளார்.
Next Story