தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு
கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 9-ஆம் வகுப்பு மாணவி தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விழுப்புரத்தைச் சேர்ந்த வடிவேல்- வித்யாஸ்ரீ தம்பதியின் மகனா கோவஸ்ரீ, பள்ளிக்குச் செல்லாமல் விடுதி கழிவறையில் தூக்கு மாட்டிய நிலையில் மீட்கபட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விடுதியில் உணவு சரியில்லை என்று கேள்வி எழுப்பியதால் தனது மகளை அடித்துக் கொன்று விட்டனர் என்று மாணவியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story