தனியார் கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

x

காரைக்குடி அருகே உள்ள விசாலையன் கோட்டையில் இயங்கி வரும் தனியார் வேளாண் கல்லூரியில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படித்து வரும் அவர், விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். படுகாயம் அடைந்த மாணவியை கல்லூரி பணியாளர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். தற்போது மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து கல்லல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரனை செய்து வருகின்றனர். மாணவியின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரித்து வரும் நிலையில், அவர் காதல் பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்