ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ராஜாவுக்கு உண்மையில் நடந்தது என்ன? - சற்றுமுன் பரபரப்பு விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில், அர்த்த மண்டபத்துக்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம்
"ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் மரபுப்படி அர்த்த மண்டத்தில் அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை"
விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு, இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் விளக்க கடிதம்
"இளையராஜா, அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள், அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறினார்"
"இசையமைப்பாளர் இளையராஜாவும், ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார்"
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் அர்த்த மண்டத்தில் கோவில் மரபுபடியும். பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர். பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் வழக்கமில்லை, இசைஞானி இளையராஜா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகளுடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் கூறிய உடன் அவரும். ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் விருதநகர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு நஆண்டாள் திருக்கோயிலுக்கு 15.12.2024 அன்று இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் வருகை புரிந்தபோது கருவறைக்குள் செல்லாமல் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என கூறியவிவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக இந்து அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள விளக்கக் கடிதத்தில்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு , 15.12.2024 அன்று இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் சுவாமி
தரிசனத்திற்கு திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர் என்றும், இத்திருக்கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னார். கருடாழ்வார், மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார். கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். எனவே. இத்திருக்கோயில் மரபு படியும். பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர். பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
15.12.2024 அன்று இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் கூறிய உடன் அவரும். ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.