"நாங்க எதை ஃபாலோ பண்றது" நடுரோட்டில் முற்றிய தகராறு - பரபரப்பு காட்சிகள்

x

ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாத பேருந்துகளை நிறுத்திய டிக்கெட் பரிசோதகரிடம், பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குச் செல்லாமல் நேராக சென்றதால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி, அபராதம் விதித்தார். இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாத பேருந்துகளை நிறுத்தி டிக்கெட் பரிசோதகர் கேட்டபோது, நெல்லை பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள அட்டவணைப்படி பேருந்துகளை இயக்குவதாக கூறி, பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு பேருந்துகள் ஊருக்குள் சென்றன.


Next Story

மேலும் செய்திகள்