ஊருக்குள் வராத பேருந்துகள்... பொறுத்து பொறுத்து பார்த்து களத்தில் குதித்த மக்கள்

x

ஸ்ரீவைகுண்டத்தில் ஊருக்குள் செல்லாத பேருந்துகளை வழிமறித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே இறக்கிவிட்டு சென்ற பேருந்துகளுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்தார். ஆனால், அதை கண்டு கொள்ளாத அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீண்டும் நேர் வழியில் சென்றதால் பொதுமக்கள் பேருந்துகளை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்