`அரங்கனும்; அல்லாஹ்வும்..' ஜாகீர் உசேன் வழங்கிய வைரக் கிரீடம்... ஜொலிக்கும் ஸ்ரீரங்கநாதர்

x

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை, பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன், கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டரிடம் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாகிர் உசேன், இந்த கிரீடம் 3 ஆயிரத்து 160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகதக் கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பிறப்பால் தான் இஸ்லாமியராக இருந்தாலும் அரங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்ததாக குறிப்பிட்டார். உலகில் முதல் முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைரக் கிரீடம் என்பது இதன் தனி சிறப்பு என்றார்.


Next Story

மேலும் செய்திகள்