பகல்பத்து உற்சவம் 9ஆம் திருநாள் - முத்துகிரீடம் அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி
பகல்பத்து உற்சவம் கடந்த 31ஆம் தேதி முதல் நடைபெற்று
வருகிறது. வைகுந்த ஏகாதசி விழாவின் 9ஆம் திருநாளான இன்று 'முத்துக்குறி' பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்துகிரீடம், முத்துகலிங்கு ஆபரணம், முத்தங்கி, முத்து அபயஹஸ்தம், முத்து திருவடி, முத்து ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு உள்பிரகாரங்களில் வலம் வந்தார். பின்னர் அர்ஜுன மண்டபத்தில் ஆழ்வார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Next Story